தஞ்சையின் பெரிய ஈசன்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள லிங்கம் 12 அடி உயரம் கொண்டது. ஈசன் எவ்ளோவு உயரம் கொண்டவர் என்பதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணர்த்த சிற்பி செய்த அற்புதத்தை காண்போம் .
பெரிய கோவிலின் தென் திசையில் உள்ள படிக்கட்டுகள் தான் சோழர் காலத்தில் உபயோகித்த நுழைவாயில் ஆகும் . அதில் இருக்கும் துவார பாலகர் சிலையின் அடியை உற்று நோக்கினால் இவ்வாறு காணலாம் .
இச்சிற்பத்தின் உட்பொருள் யாதென்றால், ஒரு பெரிய யானையை (நம் மனதில் ஒரு யானையின் உயரத்தை கணித்து கொள்வோம் ) விழுங்கும் ஒரு மாபெரும் நாகம்(ஒரு பெரிய யானையையே விழுங்கும் நாகம் என்றால் அதன் உயரத்தை கணித்து கொள்வோம் ). அந்த ராட்சத நாகம் அங்கே இருக்கும் துவார பாலகரின் கால் விரல்களுக்கு சிறியதாக இருக்கிறது ,அப்படி பார்த்தல் அந்த துவார பாலகரின் உயரம் எப்படி இருக்கும் . இங்கே காவலுக்கு இருக்கும் நானே எவ்வளவு உயரம் என்றால் உள்ளே இருக்கும் ஈசன் உன்னால் கணிக்க முடியாத அளவுக்கு பெரியவர் அதனால் அமைதியுடன் சென்று அவரை வணங்குவாயாக என்று நம்மை பார்த்து சொல்லுவது போல இருக்கிறது இந்த அற்புத சிற்பம் .
No comments:
Post a Comment